இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்து இவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கணேஷ் கே பாபு அடுத்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து தான் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே முடிந்துவிட்டன. அடுத்து அவர் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனி ஒருவன் 2விற்கு முன்பே கணேஷ் கே பாபு படத்தில் நடிப்பார் என தெரிகிறது.