அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் சிவகார்த்திகேயன், 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' (எஸ்கே புரொடக்ஷன்ஸ்) என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார். 'கனா' படத்தின் மூலம் தயாரிப்புகளை துவக்கிய அவர், அதன்பிறகு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்தது. இந்த நிலையில், அது போலியானது எனவும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: எங்கள் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.