கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலம் இல்லாத பத்துக்கு மேற்பட்ட நடிகர்கள் தான் நடித்திருந்தனர். ஆனாலும் இந்த படம் வெளியாகி கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 230 கோடி ரூபாய் வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்றது.
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் இளைஞர்களில் ஒருவர் அங்குள்ள குணா குகையில் தவறி விழுந்து விட அவரை காப்பாற்ற மற்ற நண்பர்கள் எடுக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. இதை உணர்வு பூர்வமாக சொல்லி இருந்ததால் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதேசமயம் இந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் எந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படுவதற்கு இந்த படம் கொடுக்கப்படவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து மனம் திறந்துள்ள படத்தில் இயக்குனர் சிதம்பரம் கூறும்போது, “இந்த படத்தின் கதை யுனிவர்சல் சப்ஜெக்ட் தான். என்றாலும் இது கேரளா மற்றும் தமிழகம் என இரு மாநிலங்களில் உள்ள மக்களை அவரது கலாச்சாரங்களை இணைக்கும் படமாக ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதை வேறு மொழியில் படமாக்கினால் நிச்சயமாக இந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்த முடியுமா என்பது சந்தேகம் தான். அப்படியே ரீமேக் செய்தாலும் இங்கே பெற்ற வெற்றியை அங்கே பெறுவதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. அதனால் தான் இந்த படத்தை ரீமேக் செய்ய விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.