இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பிரபலமான நடிகர், நடிகைகளை பார்த்து விட்டால் அவர்களின் பின்னாடியே துரத்தி சென்று ரசிகர்கள் செல்பி எடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். அப்போது செல்பி எடுப்பதற்காக பைக்கில் ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பாலோ பண்ணி வராதீர்கள் என்று பிரியங்கா சொன்னபோதும் அவர் விடாமல் துரத்தியதால், காரை நிறுத்தியவர், இதுபோன்று எல்லாம் காரை துரத்தி வரக்கூடாது. விபத்து ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த பிரியங்கா மோகன், பின்னர் அவருடன் செல்பி எடுத்துள்ளார். அதன் பிறகே அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து திரும்பி இருக்கிறார்.