புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அதைத் தொடர்ந்து வெளியான ஒரு டீசரில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இது நடித்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அவரது கதாபாத்திரம் வெளிப்பட்டது.
இதற்கு முன்பு தர்பார் படத்திலும் கூட ரஜினிகாந்த் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதிலிருந்தும் இதற்கு முன்பு பல படங்களில் என்கவுன்டர் போலீஸ் அதிகாரிகள் காட்டப்பட்டதற்கு முற்றிலும் மாறாகவும் இதில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் கூறியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.
இந்த கதாபாத்திரம் பற்றி மேலும் அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி சாரின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. அதை ஈடு கட்டும் விதமாக வேட்டையன் படத்தில் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. அதேசமயம் அதன் மூலம் நான் என்ன சொல்ல விரும்புகிறானோ அதிலிருந்து விலகிச் செல்லவும் இல்லை. முந்தைய படங்களில் நாம் பார்த்த என்கவுன்டர் அதிகாரிகளிலிருந்து இது எப்படி வித்தியாசப்படுகிறது என்றால் இதில் என்கவுன்டர் அதிகாரிகளின் பின்புல கதைகளை பற்றி சொல்லி இருக்கிறோம். என்கவுன்டர் குறித்த அவர்களது எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதன் மீது வெளிச்சம் பாய்சி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.