அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழில் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர், சிவா சினிமாவில் இயக்குனராக ஆவதற்கு முன்பே நடிகராக மாறியவர். அதன்பின் மலையாள திரை உலகம் சென்று அங்கே தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தை உள்ளது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு தற்போது எலிசபெத் என்கிற டாக்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா.
இருந்தாலும் தன்னுடைய பேட்டிகளில் தன்னுடைய மகள் அவந்திகாவை தன்னால் மறக்கவில்லை என்றும் அவள் மீது பாசம் செலுத்த முடியவில்லை என ஏங்குவதாகவும் அவ்வப்போது கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாலாவின் மகள் அவந்திகா சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் அவர் கூறும்போது, “என்னுடைய தந்தை என்னை மிகவும் நேசிப்பதாக பல பேட்டிகளில் கூறி வருகிறார். என்னை நிறையவே மிஸ் பண்ணுவதாக கூறுகிறார். எனக்கு நிறைய பரிசுகள் வாங்கியதாக சொல்கிறார். ஆனால் இது எதிலும் உண்மை இல்லை. நான் என் தந்தையை நேசிக்க என்னிடம் ஒரு சின்ன காரணம் கூட இல்லை. அந்த அளவிற்கு அவர் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் டார்ச்சர் செய்திருக்கிறார். சிறுவயதில் ஒருநாள் இரவு அவர் குடித்துவிட்டு வந்து என் தாயை அடித்தது இன்னும் என் கண் முன்னே இருக்கிறது. அந்த நேரத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியாத உதவி இல்லாத நிலையில் நான் இருந்ததை இப்போதும் என்னால் உணர முடிகிறது. என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். அதனால் என்னுடைய தந்தையின் குறுக்கீடு எனது வாழ்க்கையில் இருப்பதை விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
மகளின் இந்த வீடியோ பதிவால் அதிர்ச்சியான பாலா இதற்கு பதில் அளிக்கும் விதமாக கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் உன்னுடன் விவாதம் பண்ண விரும்பவில்லை பாப்பு. இன்று என்னுடைய வாழ்க்கையில் எப்போதையும் விட அதிக வலியை உணர்ந்தேன்.. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். ஒருபோதும் உன் அருகில் நான் வரமாட்டேன். கடவுள் மீது சத்தியம். நீ ஐந்து வயது கருவாக இருந்த சமயத்தில் இருந்தே உனக்கு அவந்திகா என பெயரிட்டு மகிழ்ந்தவன் உன்னுடைய தந்தை. நீ எப்போதும் எனக்கு குழந்தை தான்” என்று உருக்கமாக கூறியுள்ளார் பாலா.