ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” |
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான புகழ் ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவருக்கு பென்சி என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில், ரித்தான்யா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினம் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ், ‛என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளில் இருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது. முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.