14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
இந்தியன் 2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இதன்பிறகு இந்தியன் 3 படத்தின் பணிகளை தொடங்கும் அவர், அந்த படத்தை முடித்ததும் வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான உரிமையை பெற்றுள்ள ஷங்கர், சமீபத்தில் கூட இந்த நாவலின் காட்சிகள் சில படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தவர், இதுபோன்று யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இதன்காரணமாக அடுத்தபடியாக வேள்பாரி நாவலை உடனடியாக படமாக்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் நடிக்க விக்ரம், சூர்யா ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதோடு இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமான ஒரு பான் இந்தியா சரித்திர படமாக இந்த வேள்பாரி நாவலை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.