விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா |

2024ம் ஆண்டின் 9வது மாதத்தின் கடைசி வாரத்தில் பயணிக்க இருக்கிறோம். வரும் வாரம் செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமையில் சில படங்கள் வெளியாக உள்ளன. நேற்று முன்தினம் செப்டம்பர் 20ல் வெளியான ஏழு படங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 160ஐ கடந்துள்ளது.
இந்த 2024ம் வருடம் முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள்ளாக 50 படங்கள் நிச்சயம் வெளியாகி விடும். வரும் மாதங்களில் சில பெரிய படங்கள் வெளியாக உள்ளதால் அவற்றிற்கு முன்பும், பின்புமாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை ஓரளவிற்குக் குறைவாக இருக்கும். ஆனால், மற்ற வாரங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகும்.
இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான 160 படங்களில் 'தி கோட்' படம் 400 கோடிக்கு அதிகமான வசூலைக் குவித்துள்ளது. அந்த சாதனையை அடுத்து வர உள்ள 'வேட்டையன், கங்குவா' ஆகிய படங்கள் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள். 'ராயன், இந்தியன் 2, மகாராஜா, தங்கலான், அரண்மனை 4' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. 'டிமாண்டி காலனி 2, கருடன்' ஆகிய படங்கள் 50 கோடி வசூலைக் கடந்தாலும் லாபத்தைத் தந்த படங்களாக உள்ளன.
இதுவரை வெளியான 160 படங்களில் 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்பது ஆச்சரியமல்ல, அதிர்ச்சிதான்.