15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது முதிர்வு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
தமிழில் கமல்ஹாசன், அமலா நடித்த 'சத்யா' படத்தில் நடித்துள்ளவர் பொன்னம்மா. அப்படத்தில் அவருடன் நடித்த காட்சி ஒன்றைப் பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13ம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.
'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி,” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.