300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. என்றாலும் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது கூலி படத்திற்கு பிறகு மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனத்துக்கும் சிம்புவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தற்போது அந்த கதையை ரஜினிக்காக திருத்தம் செய்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். கதையை கேட்ட ரஜினியும் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
மேலும், இந்த ஜூட் அந்தோணி ஜோசப் மலையாளத்தில் பிரேமம், போக்கிரி சைமன், டான்ஸ் பார்ட்டி, குயின் எலிசபெத் என பல படங்கள் நடித்திருப்பதோடு, டொவினோ தாமஸ் நடித்து வெளியான ‛2018' என பல படங்களில் ரைட்டராக பணியாற்றி இருப்பதோடு குறும்படங்களும் இயக்கி உள்ளார்.