விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் 1991ல் வெளியான படம் ‛குணா'. இளையராஜா இசையமைத்து இருந்தார். கமலின் நடிப்பு, இளையராஜாவின் இசை, குணா குகை என படத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும் அந்த சமயம் படம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது வரை கமலின் நடிப்பை கூறும் படங்களில் இந்த குணா-விற்கு ஒரு இடம் உண்டு.
இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வந்தன. இதனை பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. ஆனால் படத்தின் பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ரீ-ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து, இதுபற்றி பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.
இந்த வழக்கு இன்று(செப்., 6) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. எனவே குணா படத்தின் வெளியிடும் உரிமையை கன்ஷியாம் ஹேம்தேவ் கோர முடியாது என வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, குணா படத்தின் ரீ-ரிலீஸிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து விரைவில் குணா படம் ரீ-ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.