நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் 'சிவா' ரீ-ரிலீஸ் | சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'தி கோட்' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கிறது என படம் பார்த்த சினிமா ரசிகர்கள் படத்தைப் பற்றி தங்களது பார்வையை முன் வைத்துள்ளார்கள். ஆனால், படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களைப் பரவச் செய்வதில் சிலர் தீவிரமாக ஈடுபடுவதாக கோலிவுட்டில் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
கடந்த வருடம் 'லியோ, ஜெயிலர்' படங்களின் நிகழ்ச்சிகளில் விஜய், ரஜினி பேசிய 'காக்கா கழுகு கதை'யால் அவர்களது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனால், விஜய்க்கு எதிராக கடந்த கடந்த ஒரு வருடமாக ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். வழக்கம் போல அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாகவே விஜய்க்கு எதிராகவும், அவரது படங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் அவ்வப்போது சூர்யா ரசிகர்களும் சேர்ந்து கொள்வார்கள். ரசிகர்களின் மோதல் இப்படி ஒரு எதிர்ப்பு சினிமா அரசியலாக இருக்க மற்றொரு பக்கம் தமிழக அரசியலும் சேர்ந்துள்ளதாகவும் ஒரு கருத்து பரவியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அடுத்த வருட சட்டசபைத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதால் அரசியல் ரீதியாகவும் அவருடைய படத்துக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள் என விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.
அடுத்தது விஜய் நடிக்கும் படங்களோ அல்லது தமிழில் டாப் நடிகர்களாகவோ உள்ள ஹீரோக்களின் படங்கள் தெலுங்கில் ஓடிவிடக் கூடாது என அங்குள்ள விமர்சகர்கள், சில மீடியாக்கள், ஏன் சில தெலுங்கு நடிகர்களே கூட மறைமுகமாக படத்திற்கு எதிராக வேலை செய்வதாகவும் தமிழ்த் திரையுலகில் சொல்கிறார்கள்.
இப்படி இவ்வளவு ஏச்சுக்கள், பேச்சுக்கள், எதிர்மறை கருத்துக்கள், விமர்சனங்கள் ஆகியவற்றைக் கடந்து 'தி கோட்' படம் வெளியாகி முதல் நாளில் ரூ.126 கோடி வசூலைக் கடந்துள்ளது. நாளை வரை நான்கு நாட்களுக்கு பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வியாபார ரீதியாக இப்படம் வெற்றியைப் பெறும் என கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.