பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நாளை மறுதினம்(செப்., 5) உலக அளவில் வெளியாக உள்ள தமிழ்ப் படம் 'தி கோட்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். அந்த மொழிகளில் வெளியான படத்தின் டிரைலர், பாடல்கள் ஆகியவற்றிற்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, வட இந்திய மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 'தி கோட்' படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சங்கத்தினர் ஒரு படம் தியேட்டர்களில் வெளியானால் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை கட்டுப்பாடாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும்படி அவற்றின் தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களுக்கு படங்களை விற்கிறார்கள். அதன் மூலம் ஒரு பெரும் தொகை அவர்களுக்குக் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் எந்த ஒரு பெரிய படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடித்து ஓடுவதே அதிகம் என்ற நிலைதான் உள்ளது.
'தி கோட்' படத்திற்கான வட இந்திய வெளியீடு குறித்து அதன் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும், மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் சங்கத்தினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, வட இந்தியாவில் சிங்கிள் தியேட்டர்களில் மட்டுமே 'தி கோட்' படம் வெளியாகிறது. அங்கு படத்தை வெளியிடும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 500க்கும் மேற்பட்ட இடங்களில் 1000க்கும் கூடுதலான தியேட்டர்களில் வட இந்தியாவில் இப்படம் வெளியாகிறது என அறிவித்துள்ளது.
செப்டம்பர் 6ம் தேதி வெளியாவதாக இருந்த கங்கனா ரணாவத் நடித்த 'எமர்ஜென்சி' படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 'தி கோட்' படத்திற்கு பெரிதாக எந்த போட்டியும் இல்லை. எனவே, வட இந்திய மாநிலங்களில் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் படத்தை வெளியிட்டிருந்தால் அந்த வசூல் சாதனை வசூலாக இருந்திருக்குமே என விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.