ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2024ம் வருட தீபாவளியில் சில 'டாப்' நடிகர்களின் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு முன்னதாகவே நாளை மறுதினம் விஜய் நடித்துள்ள 'தி கோட்', அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. ரஜினி படத்துடன் போட்டி போட வேண்டாமென 'கங்குவா' படம் போட்டியிலிருந்து விலகியது. அந்தப் படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்', ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தையும் தீபாவளிக்கு வெளியிடுகிறோம் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதனால், இந்த வருட தீபாவளிக்கு 'டாப்' நடிகர்களின் படங்கள் வராமல் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள்தான் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோர்தான் இந்த தீபாவளிக்கு மோத உள்ளனர்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படம் என்றாலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுவதாலும், 'அமரன்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.