கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
திருவனந்தபுரம் : மலையாள நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த மோகன்லால், ‛நான் எங்கும் ஓடி ஓளியவில்லை, நடிகர் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்பாதீர்கள்' என கேட்டுக் கொண்டார்.
மலையாள திரையுலகில் சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது நடிகைகள் சிலர் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. மலையாள நடிகர் சங்கமான ‛அம்மா' ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தது. தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேரும் பதவி விலகினர். இந்த விவகாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணாமல் நடிகர் சங்கம் ராஜினாமா செய்தது கோழைத்தனமான செயல் நடிகை பார்வதி உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.
ஓடி ஒளியவில்லை
இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், அம்மா அமைப்பின் தலைவராக இருந்த மோகன்லால். அவர் கூறுயைில், ‛‛அம்மா சங்கத்தில் நான் இரு முறை தலைவராக இருந்துள்ளேன். பாலியல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டாலும் சங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. அதன் பணிகளை செய்கிறது.
பேரிடர் காலத்தில் பல உதவிகளை சங்கம் செய்தது. அதன் மீது அவதூறு பரப்பாதீர்கள். மலையாளத்தில் 21 சங்கங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் நடிகர் சங்கத்தை மட்டும் குறை கூறுவது சரியல்ல. நான் இங்கு தான் இருக்கிறேன், எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்த விஷயத்தில் அரசு தனது கடமையை செய்யும்.
மலையாள சினிமா பாதிக்க கூடாது
பாலிவுட்டை போன்று மலையாள சினிமா பிரமாண்டமானது அல்ல கஷ்டபப்பட்டு முன்னேறி வருகிறது. இந்த விவகாரத்தால் மலையாள சினிமா பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கடைநிலை தொழிலாளர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டில் இருந்து மலையாள சினிமாவை காக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதில் இருந்து மீண்டு வர வேண்டும்.
பாலியல் தொடர்பான பிரச்னையில் அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் என்ன இருந்தது என எனக்கு தெரியாது. ஆனால் அதை வரவேற்கிறேன், விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பாலியல் குற்றச்சாட்டு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இனி அதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெல்லட்டும். நீதிமன்றத்தில் உள்ள பிரச்னைகளை நான் பேச முடியாது. விசாரணை குழுவிற்கு முழு ஒத்துழைப்பு தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.