பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

சமீப காலமாக இளம் முன்னணி இயக்குனர்கள் இங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும்போது மற்ற மொழிகளில் இருக்கும் பிரபல முன்னணி நட்சத்திரங்களை அழைத்து வந்து சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் புது ட்ரெண்டிங்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோரை அழைத்து வந்து ரஜினியுடன் நடிக்க வைத்தார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பல கலர்புல்லான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அது மட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி திடீரென அவர் இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு காரணம் இந்த படத்தில் மோகன்லால் நிச்சயமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதால் தான் என ரசிகர்களாக தங்கள் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கலாம்.