இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சினிமாவில் வாய்ப்புக்காக யாராவது அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னால் அவர்களை செருப்பால் அடிங்கள் என நடிகர் விஷால் தெரிவித்தார். மேலும் நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்த கேள்விக்கு அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். அதையடுத்து என்னிடத்தில் பல செருப்புகள் உள்ளன என்று விஷாலை மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில் அவர் எக்ஸ் பக்கத்தில் இன்னொரு பதிவு போட்டுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட பெண்கள் அதிகமான உழைப்பை கொடுத்தாலும் விருந்துகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகெலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள். ஆண் எப்போதுமே ஒரு ஆண். அவன் மட்டுமே சரியானவன் என்று துரதிஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரிக்கிறார்கள். என்ன பரிதாபமான உலகம் இது என்று தெரிவித்திருக்கிறார்.