இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த 'பேட்ட' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ‛வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கிப் பாயும் தோட்டா, வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார்.
மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக காதலித்து வந்த சாய் விஷ்ணு என்பவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இவர்களது திருமணம் சென்னையில் செப்டம்பர் 15ல் நடக்க இருக்கிறது. முன்னதாக செப்டம்பர் 14ல் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மேகா ஆகாஷின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு பற்றிய முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் 2வது மகன் தான் இந்த சாய் விஷ்ணு. சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குனர் பா.ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
![]() |