சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேர 55 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக வெளியாகிறதாம். மேலும், இதில் கடைசி மூன்று நிமிடங்கள் வழக்கம் போன்று வெங்கட் பிரபு படங்களில் உள்ள திரைக்கு பின்னால் நடைபெற்ற சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவை காட்சிகளையும் இணைந்துள்ளனர் என கூறப்படுகிறது.