வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அமைந்துள்ள வீட்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா வசித்து வந்த வாடகை வீடு என்பது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், ‛கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார்.
எனவே நான் வாடகை பணம் கேட்க போன் செய்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். மேலும் நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து சென்றுள்ளார். இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளேன். இதை தீர விசாரித்து யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ்
இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் பொய்யான புகார் அளித்ததாகவும், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க வீட்டு உரிமையாளர் முயற்சிப்பதாகவும் கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு யுவன் சங்கர் ராஜா தரப்பில் வீட்டு உரிமையாளருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.