Advertisement

சிறப்புச்செய்திகள்

தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛என் ஆளுமையை மாற்றிய தமிழ்ப் பேச்சு': தமிழிற்கு ராஜமரியாதை தரும் ராஜ்மோகன்

18 ஆக, 2024 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Director-Rajmohan-Exclusive-Interview


‛சிலர் மெனக்கெட்டு இலக்கண, இலக்கியங்களை கரைத்து குடித்திருப்பார்கள். சிலருக்கு இயல்பாக தமிழ் வரும். அப்படி இயல்பாக என்னை அணைத்துக் கொண்டாள் தமிழ் அன்னை. தமிழில் பேச பிடிக்கும். தமிழை ஆள் பிடிக்கும். அதுதான் என்னை ரேடியோவில் இருந்து சினிமா வரை அழைத்துச் சென்றது' என்கிறார் சினிமா இயக்குநர் ராஜ்மோகன்.

இவரது வசீகர குரலில் அழகுத் தமிழை கேட்பதே தமிழுக்கும் விருப்பம் என்பது போல் பள்ளி, கல்லுாரி, நிறுவனங்களில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் தடம் பதித்து வரும் ராஜ்மோகன், நமக்காக சில நிமிடங்கள் பேசினார்.

பொறியியல் பட்டதாரிக்கு தமிழ் மீது ஆர்வம் எப்படி

படிக்கும் போதே பேச்சு, கவிதை, நாடகம மீது ஈர்ப்பு. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் போதே சென்னையில் எப்.எம் ரேடியோவில் ஆர்.ஜே., ஆனேன்.

டிவி திசையில் சென்றது எப்படி

ஆர்.ஜே.வாக சென்னை, இலங்கையில் நிறைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கினேன். நாடகங்களை எழுதி இயக்கினேன். ஒருநாள் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த போது ஒரு டிவியின் அறிவியல் சார்ந்த புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கை ரேடியோவில் தமிழ் அனுபவங்கள்...

அங்கு தான் என் தமிழ் செழுமையானது. அங்கே டீக்கடைக்கு சக அறிவிப்பாளர்களுடன் செல்வதுண்டு. டீக்கடைக்கு போகலாம் என்று நான் சொல்லும் போது அவர்கள் தேநீர் கடை என திருத்துவார்கள். சாப்பிடலாமா என நான் கேட்டதும் அங்கிருந்த சிறுவன், ‛அண்ணா டீ சாப்பிட இயலாது. குடிக்கத் தான் இயலும்' என்றான். அங்கே மூச்சு விடுவதை போல, கண் இமைப்பதை போல நல்ல தமிழ் பேசுவது இயல்பாக இருக்கிறது. அது தான் என் ஆளுமையை மாற்றியது.

அடுத்த தேடல்....

டிவியில் இருந்து சோசியல் மீடியா சென்றேன். அங்கும் மன நிறைவு ஏற்படாததால் சினிமாவுக்கு சென்றேன். முதல் படமாக ‛பாபா பிளாக் ஷிப்' எழுதி இயக்கினேன். திரையில் வெளிவந்து தற்போது ஓ.டி.டி.,யில் உள்ளது. அடுத்த படத்திற்கு கதை எழுதும் பணியில் உள்ளேன்.

படங்களில் நடிப்பதை விட்டு இயக்குநரானது ஏன்

நட்பே துணை, ஹாக்கி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, மாரி 2 படங்களில் நடித்திருந்தாலும் எழுத்து, இயக்கம் போன்ற கிரியேட்டிவ் விஷயங்களில் தான் எனது சித்தனை இருந்தது. நடிப்பு தானாக வந்த வாய்ப்பு. எழுத்தும் இயக்கமும் எனது தொழில்.

அடுத்தகட்ட முயற்சி

மேடை, சோசியல் மீடியா வீடியோக்களில் பேசுவது அந்த நிமிடத்துடன் முடித்து விடுகிறது. எழுத்து தான் இமயமலை போன்று காலத்திற்கும் நிற்கும். மாணவர்களை ஊக்கப்படுத்த நிறைய புத்தகங்கள் எழுத உள்ளேன். பேச்சு தான் ஒருவருடைய கேரக்டரை வெளிக்காட்டுகிறது. முதல் புத்தகம் ‛தமிழ்ப்பேச்சு' என்ற தலைப்பில் வெளிவரும்.

உங்கள் படங்களில் வன்முறை காட்சிகளுக்கு இடமுண்டா

என்னுடைய முதல் படத்தில் மது, புகை, போதைப்பொருள் காட்சிகள் இடம்பெறவில்லை. இனிமேலும் எடுக்க மாட்டேன். கத்தி, ரத்தம், துப்பாக்கி தோட்டாக்கள் இன்றி எனது 2வது படம், கணவன், மனைவி காதலை மையப்படுத்தி உருவாகிறது. இது போன்ற படங்கள் வந்து நீண்ட நாளாகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்துவது தான் இப்போதைய சினிமாவின் தேவை.

இளைஞர்களுக்கு சொல்வது

உடனடி சந்தோஷம் என்பது அற்ப சந்தோஷம். 5 நிமிஷம், அரைநாள் என போதையின் பாதை சந்தோஷமாக இருக்கும். தொலைதூர சந்தோஷம் என்பது நிலைத்த சந்தோஷம். போதைக்கு செலவு செய்யும் தொகையை சேர்த்து வைத்தால் அடுத்த தலைமுறைக்கு செல்வத்தை சேர்ந்து வைக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகி பி.சுசீலா  மிகவும் நலமாக உள்ளார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ... பிரபாஸ் உடன் இணைந்த ‛சீதா ராமம்' இயக்குனர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பிரபாஸ் உடன் இணைந்த ‛சீதா ராமம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)