அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
வருகிற செப்டம்பர் 26, 27ம் தேதிகளில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுவதாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம் நடத்துகிறது. ஓரான் பாமுக், ஹருதி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படை ப்புகளை தமிழில் மொழி பெயர்த்த எழுத்தாளர் ஜி. குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சுயவிவரத்துடன் கமல் பண்பாட்டு மையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்க்கும் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும். பயிற்றுனரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்,' என்று தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.