லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படம் தொடங்க இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதோடு இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தின் வேலைகள் கைவிடப்பட்டு வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் வாடிவாசல் படத்தில் தனுஷ் நடிக்க போவதாகவும் செய்திகள் வந்தன. என்றாலும் அது குறித்து படத்தை தயாரிக்கும் எஸ். தாணுவிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார் வெற்றிமாறன். அந்த விழாவுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் வந்திருந்தார். அப்போது பேசிய வெற்றிமாறன், ‛ரொம்ப நாளாவே வாடிவாசல் வருது வருதுன்னு சொல்லிக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரமே படத்தை ஸ்டார்ட் பண்ணி விடுவோம்' என்று கூறினார். இதன் மூலம் வாடிவாசல் கைவிடப்படவில்லை. விரைவில் தொடங்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.