2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் |

திரையுலக பயணத்தில் தனது 65வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்து ஆச்சரியப்படுத்தும் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களாகவே அரசியல் கட்சி துவக்கம், பிக்பாஸ் நிகழ்ச்சி என திசை மாறியதால் அவரது படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகவில்லை, குறிப்பாக 2018ல் வெளியான விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து 2022ல் தான் அவர் நடித்த விக்ரம் படம் வெளியானது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் பிஸியான நடிகராக மாறியுள்ள கமல் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், இதில் அவர் தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்த கல்கி திரைப்படம் ஜூன் 27ல் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பிரபல எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் சிறுகதைகளின் தொகுப்பாக உருவாகியுள்ளா மனோரதங்கள் படத்தில் ஒரு அத்தியாயத்தில் கமலும் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் 50 நாட்களுக்குள்ளாகவே கமல் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. கமல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் தக் லைப் படமும் இந்த வருடமே வெளியானால் ஒரே வருடத்தில் நான்கு படங்கள் என்கிற புதிய சாதனையையும் கமல் நிகழ்த்தி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.