பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் மலையாள நடிகைகள் சில சிறப்பான படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெறுகிறார்கள். தமிழில் மற்ற மொழி நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகம் என்றாலும், மலையாள நடிகைகளின் படங்கள் தேர்வு ஆச்சரியமளிக்கும்.
அவர்கள் நடிகர் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றால் அதில் நடிப்பதற்கு முன் வருவார்கள். அப்படியான நடிகையர் இப்போதும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
'வாழை' படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ள அன்னா பென் ஆகியோர் இதற்கு சமீபத்திய உதாரணம். நிகிலா, அன்னா பொன் ஆகியோர் அவர்களது படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் படம் வெளிவந்த பின் அவர்களைப் பற்றிப் பேச வைக்கும் என படக்குழுவினர் சொல்கிறார்கள். தமிழக கிராமத்துப் பெண்களாகவே அவர்கள் மாறியுள்ளார்கள் என படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு.