வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தியாகராஜன் இயக்கி உள்ளார். அவரது மகன் பிரசாந்த் நாயகனாக நடித்துள்ளார். இது பிரசாந்தின் 50வது படம். வருகிற 9ம் தேதி வெளியாகிறது.
சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.
படத்தின் முன் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சமுத்திரகனி பேசியதாவது: இந்த படத்தில் பிரசாந்துடன் நடித்தபோது நண்பன் சசியை பல இடங்களில் பிரசாந்த் நினைவு படுத்தினார். நாங்கள் இருவரும் ஐயா ஐயா என்று தான் பேசிக் கொள்வோம். இதில் ஆழ்ந்த அன்பு உள்ளது. அந்தப் பேச்சில் காரணமே இருக்காது. அன்பு மட்டுமே இருக்கும்.
எனக்கு தியாகராஜனை பார்த்தாலே பயம். நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றிய போது 'மலையூர் மம்பட்டியான்' படத்தை ஓட்டி இருக்கிறேன். 'கொம்பேறி மூக்கன்' படத்தை திரையில் பார்க்கும்போதே எனக்குள் பதட்டம் வந்துவிடும். அவர் போனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று பதில் அளித்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன். அவருடைய அன்பிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் வந்தார். படப்பிடிப்பின் போது இதுவரை யாரும் என்னை திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார். அந்தக் காட்சியில் அவர் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். நான் இயக்குநரை பார்க்கிறேன். அவர் என்னிடம் வந்து நான் சொல்லியதை கடந்தும் அவர் திட்டிக் கொண்டிருக்கிறார் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு வனிதா விஜயகுமாரை பார்த்தபோது, இயக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்ட சொன்னார் என தியாகராஜனை கை காட்டினார்.
இவ்வாறு சமுத்திரகனி பேசினார்.