வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகர் திலகம் சிவாஜி 300 படங்களுக்கு மேல் நடித்தார். அவரின் தோல்வி படங்கள் கூட ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அரிதாக ஒரு சில படங்கள் மட்டுமே எந்த அடையாளமும் இல்லாமல் கடந்து சென்றிருக்கும். அப்படியான ஒரு படம்தான் 'என் தமிழ் என் மக்கள்'.
1988ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சந்தானபாரதி இயக்கி இருந்தார். இதில் சிவாஜியுடன் வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, பல்லவி, சின்னி ஜெயந்த், மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.எஸ்.சந்திரன், விஜயகுமார், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்திருந்தது.
ஒரு சில தியேட்டர்களில் வெளியாகி ஒரு சில நாட்களே ஓடிய படம் இது. சிவாஜி அப்போது அரசியல் கட்சி தொடங்கிய நேரம் என்பதால் அப்போது ஆட்சியில் இருந்த கட்சி இந்த படத்தை முடக்கி விட்டதாக சொல்வார்கள். இதில் சிவாஜி மக்கள் சேவகனாக நடித்திருந்தார்.