ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு, சந்தியாராகம்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் சொக்கலிங்க பாகவதர். 80களில் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றாலும் இவர் பாகவதர் காலத்து ஆளு. அந்தக் காலத்திலேயே 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நாரதராக நடித்தார். துக்காராம், ரம்பையின் காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக நாடகங்களில் நடித்து வந்தவரை 1988ம் ஆண்டு 'வீடு' படத்தின் மூலம் திரைக்கு கொண்டு வந்தார் பாலுமகேந்திரா. தொடர்ந்து சதிலீலாவதி, தையல்காரன், ஜென்டில்மேன், அம்மா பொண்ணு, ராமன் அப்துல்லா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.
தனியாக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த சொக்கலிங்க பாகவதரை பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து விட்டார். அப்போது ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம்.
90வது வயதிலும் நடித்து வந்தார். 2002ம் ஆண்டு தனது 92வது வயதில் காலமானார். நடிப்பில் மட்டுல்லாது பாடுவதிலும் திறமையானவராக இருந்தார். 1934ம் ஆண்டு இவரின் பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனிதான் இவருக்கு பாகவதர் பட்டம் கொடுத்தது.