அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
அருவி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதிதி பாலன் முதல் படத்திலேயே வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பிறகு குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட அழுத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார் அதிதி பாலன்.
அதேசமயம் தான் நடித்துள்ள பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன என்று கூறியுள்ள அதிதி பாலன் தான் நடித்து இன்னும் வெளியாகாத ஆந்தாலஜி படம் ஒன்றுக்காக நடத்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சேலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே அந்தப் பகுதியை சேர்ந்த கிராமங்களுக்கு சென்று தங்கிய அதிதி பாலன் அங்கிருந்த கிராமத்து பெண்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து தோட்டத்திற்கு சென்று காலையிலேயே அரளிப் பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்த அனுபவத்தின் மூலம் புதிய மனிதர்கள், குறிப்பாக துணிச்சலான குடும்பப் பெண்கள், அவர்களது புதிய திறமைகள் ஆகியவற்றை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அது தனக்கு உந்து சக்தியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் பணியாற்றியது தனக்கு பிடித்ததாகவும் இப்போது வரை இந்த படம் வெளியாகாத நிலையில் ஒருநாள் நிச்சயம் இந்த படத்திற்கும் வெளிச்சம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அதிதி பாலன்.