ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த வாரம் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் மும்பையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான்கான் போன்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதுடன் இளைஞர்களைப் போல உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மகேஷ்பாபு, ராம்சரண், சூர்யா, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் தம்பதி சகிதமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்,
அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் ஆர்வமாக இணைந்து புகைப்படங்களும் செல்பிகளும் எடுத்துக் கொண்டு சோசியல் மீடியாவில் வெளியிட்டு தங்களது ரசிகர்களை பரவசப்படுத்தினர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் விக்னேஷ் சிவனுடன் நடிகர் மகேஷ்பாபு, அவரது மனைவி நம்ரதா, நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, ஜெனிலியா என முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றாக இடம் பெற்றுள்ளனர்.