ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என அடுத்தடுத்து இரண்டு மாறுபட்ட படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குனர் எனப் பெயரைப் பெற்றவர் சுதா கொங்கரா. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தார்கள்.
இருந்தாலும் அந்தப் படத்தை இருவரும் இணைந்து மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு பரவியது.
இந்நிலையில் அந்த பேச்சு தற்போது உறுதியாக ஒப்பந்தம் வரை போய்விட்டதாகச் சொல்கிறார்கள். புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம். கதையைக் கேட்டு பிடித்துப் போன சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை 'மிஸ்' செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். அவரது முயற்சியில் ஒரு புதிய தயாரிப்பாளரைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.