ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. கடந்த வாரம் வெளியான தமிழ்ப் படமான 'இந்தியன் 2', ஹிந்திப் படமான 'சர்பிரா' ஆகிய படங்களை விடவும் இந்தப் படம் கடந்த சில நாட்களில் மட்டுமே அதிக வசூலைப் பெற்றுள்ளதாம்.
படத்தின் மாபெரும் வெற்றிக்கு நாயகன் பிரபாஸ் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“எனது ரசிகர்களே, இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் நான் பூஜ்ஜியம். இந்தப் படத்திற்காக இயக்குனர் நாக் அஸ்வின் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். இவ்வளவு பணத்தை பணயம் வைத்ததற்காக துணிச்சலான தயாரிப்பாளர் அஸ்வினி தத்திற்கு நன்றி.
நான் ஒரு முறை தயாரிப்பாளர் தத்திடம் நிறைய பணம் செலவழிக்கிறீர்கள் என சொன்னேன். நாங்கள் அனைவரும் கவலைப்பட்டடோம். ஆனால், அவர் என்னிடம் கவலைப்பட வேண்டாம், நாங்கள் பெரிய வெற்றியைக் கொடுப்போம், மிக உயரந்த தரமான படத்தைக் கொடுப்போம் என்று உறுதியளித்தார்.
இந்திய சினிமாவின் பெரிய ஜாம்பவான்களான அமிதாப், கமல் ஆகியோருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களான ஸ்வப்னா, பிரியங்கா, நாக் அஸ்வின் ஆகியோருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். மிக அழகான தீபிகாவிற்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிதாக இருக்கும்,” என்றார் பிரபாஸ்.