ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி உட்பட பல படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இவர் தற்போது யோகி பாபு நடிப்பில் ‛போட்' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஆங்கிலேயர்களின் அடக்கு முறையில் இருந்து தப்பித்து, பத்து பேர்களை தனது போட்டில் அழைத்துக் கொண்டு வங்காள விரிகுடா கடலில் பயணிக்கிறார் யோகி பாபு. அப்போது அவர்களுக்கிடையே நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள்தான் இந்த படம் என்று எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் இயக்குனர் சிம்பு தேவன்.