சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
சந்திரமுகி-2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‛பென்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். மேலும் விரைவில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கதை எழுதும் பணிகள் நடந்து வருகிறது என்று அவ்வபோது கூறி வந்தார் லாரன்ஸ். இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சனா-4 படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலானபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காஞ்சனா-4 படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது லாரன்ஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். அதோடு காஞ்சனா-4 படத்தின் கதைப் பணிகளும் முடிந்து விட்டது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் காஞ்சனா -4 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.