என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் |
ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. 'இந்தியன் 2' படத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த தெலுங்குப் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஷங்கர். அதன்பின் 'இந்தியன் 2' சிக்கல் தீர்ந்த பிறகு இரண்டு படங்களிலும் பணிபுரிய ஆரம்பித்தார். அதன் காரணமாக 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பும் நீண்டு கொண்டே போனது.
இந்நிலையில் நேற்று 'இந்தியன் 2' படத்தின் நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் ஷங்கர், “1990களில் எனது முதல் படத்திலிருந்தே தெலுங்கு ரசிகர்கள் எனக்கு நல்ல ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். அதனால்தான் தெலுங்குப் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுடன் இணைந்தேன். இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது. படத்திற்கு இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. அதன்பின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்தபின் நல்ல தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
ராம்சரண் திரையில் சிறப்பாக நடிக்கக் கூடிய ஒரு நடிகர். ரசிகர்களை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சக்தி அவரிடம் உள்ளது. சக்தி வாய்ந்த வெடிப்பில் அந்த சக்தி கட்டவிழ்த்து விடத் தயாராக உள்ளது. 'கேம் சேஞ்சர்' படம் வெளிவந்தவுடன் அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்,” என்று பேசியுள்ளார்.
2024ம் ஆண்டிற்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.