சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் போர் தொழில் என்ற படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா. கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க விக்னேஷ் ராஜா தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் மற்றும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் குபேரா போன்ற படங்களில் நடித்து வரும் தனுஷ், அந்த படங்களை முடித்த பிறகு விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் வருகிற ஜூலை 26ல் திரைக்கு வருகிறது.