‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அஷூதோஷ் கோவரிகர். அமீர்கான் நடித்த லகான், ஷாருக்கானின் ஸ்வதேஷ், ஹிருத்திக் ரோஷன் நடித்த ஜோதா அக்பர் என விதவிதமான கதைக்களங்களில் படங்களை இயக்கி புகழ் பெற்றவர். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மும்பையில் இயக்குனர் அஷூதோஷ் கோவரிக்கரை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து விஷ்ணு விஷால் கூறும்போது, “என்னுடைய பேவரைட் படமான லகான் இயக்குனருடன் ஒரு அருமையான சந்திப்பு. திரைப்படங்களைப் பற்றி குறிப்பாக தமிழ் சினிமாவை பற்றி நிறைய விவாதித்தோம். உங்களுடைய அன்பான நேரத்தையும் அருமையான எண்ணங்களையும் ஒதுக்கியதற்காக உங்களுக்கு நன்றி. கட்டா குஸ்தியை பற்றிய உங்களது பாராட்டுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
விஷ்ணு விஷாலும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் நெருங்கிய நண்பர்கள் என்பது கடந்த வருடம் வெளியான மழை வெள்ளத்தின் போது தெரிய வந்தது. அந்த சமயம் விஷ்ணு விஷால் வீட்டில் தான் ஆமீர்கான் தங்கி இருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தான் தற்போது மும்பை சென்றுள்ள விஷ்ணு விஷால் இயக்குனர் அஷூதோஷ் கோவரிக்கரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்றே தெரிகிறது.