4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

அருவி, வாழ், டாடா போன்ற படங்களில் கவனம் பெற்றவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தனியார் டிவியில் ஒளிபரப்பான கமல் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இது வலைதளங்களில் டிரெண்ட்டாகி, அவருக்கான ஆதரவு பெருகியது.
இந்நிலையில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக மணப்பெண் உடன் இருக்கும் போட்டோவை வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பிரதீப். ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விபரத்தை வெளியிடவில்லை. இது காதல் திருமணம் என கூறப்படுகிறது. விரைவில் மணப்பெண் பெயரையும், திருமண தேதியையும் பிரதீப் வெளியிடுவார் என தெரிகிறது.




