ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
டிரைலரைப் பார்த்ததுமே எத்தனை ஹாலிவுட் படங்களின் காப்பி இது என்ற ஒரு சந்தேகம் ரசிகர்களிடம் நிச்சயம் எழுந்திருக்கும். படங்களின் காப்பியா இல்லையா என்பது தெரியாது, ஆனால், சிலரது உழைப்பை படக்குழு காப்பி அடித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்கொரிய ஓவியக் கலைஞரான சுங் சோய் என்பவர் அவரது சமூக வலைத்தளத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் வரைந்த ஒரு ஓவியத்தையும், 'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்றையும் பதிவிட்டு, “கலைப் படைப்புகளை அனுமதி வாங்காமல் பயன்படுத்துவது ஒரு மோசமான நடைமுறை. இந்த சட்டமற்ற சூழலில் இப்படியாக செய்வதை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆலிவெர் பெக் என்ற 'கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட்' , இது போன்ற மற்றொரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். “ஸ்டார் டிரெக்'கிற்காக நான் செய்த சில வேலைகளை வைஜெயந்தி மூவீஸ் குழு திருடியுள்ளது என நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு திறமைசாலியான சுங் சோய் ஓவியத்தை நேரடியாகத் திருடியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற காப்பி புகார்கள் பற்றி 'கல்கி 2898 எடி' குழு மீது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.