'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி |
தமிழில் விஐபி, லிட்டில் ஜான், கனெக்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் அனுபம் கெர். இவர் சமீபத்தில் டில்லியில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற விழாவில் கலந்து கொண்டார். இதே விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்தும் சென்றிருந்தார். அப்போது தன்னுடன் வந்த ரஜினியோடு ஒரு செல்பி வீடியோ எடுத்த அனுபம் கெர், ‛‛ரஜினிகாந்த் மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த வரம்'' என்று கூறியுள்ளார். அப்படி ரஜினியுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் அவர் பதிவிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.