லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வலம் வரும் சர்வானந்த், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மனமே என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாகவும் சிறுவயது குழந்தை ஒன்றுக்கு பெற்றோராகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார்.
ஆச்சரியமாக இந்த படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா கூறும்போது, “இந்த 14 பாடல்களும் படத்தின் வேகத்திற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. அதே சமயம் கதையை எளிதாக நகர்த்திச் செல்லவே உதவி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் ஹேஷம் அப்துல் வகாப் அறிமுகமான ஹிருதயம் படத்திலும் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.