Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான்கான்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த கரீனா கபூர் - ராஷ்மிகா மந்தனா!

06 ஜூன், 2024 - 05:18 IST
எழுத்தின் அளவு:
Rashmika-Mandanna-and-Kareena-Kapoor-joins-Salman-Khan-AR-Murugadoss'-'Sikandar'


தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‛சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கப் போகிறார். தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தமாகி வருகிறார்கள்.

மேலும் இரண்டு ஹீரோயின்கள் இடம்பெறும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கமிட்டாகி விட்ட நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் இன்னொரு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே சல்மான்கானுடன் ‛தபாங்-2' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஓரிரு தமிழ் நடிகர் நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது இப்படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரவீணாவின் கார் யார் மீதும் மோதவில்லை : போலீஸ் அதிகாரி விளக்கம்ரவீணாவின் கார் யார் மீதும் ... பாலிவுட்டிற்கு கங்கனா ரணாவத் கண்டனம் பாலிவுட்டிற்கு கங்கனா ரணாவத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)