தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு |
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிசியாக இருக்கிறார் தான்யா ஹோப். கடந்த ஆண்டு அவர் நடித்த கப்சா (கன்னடம்), கிக், லேபிள், குலசாமி ஆகிய 4 படங்கள் வெளிவந்தது. இந்த ஆண்டு ரணம், அறம் தவறேல், வல்லான், கோல்மால் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'வெப்பன்' படம் நாளை வெளிவர இருக்கிறது. இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார்.
சத்யராஜ் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் நடித்திருப்பது குறித்து தான்யா ஹோப் கூறியிருப்பதாவது: இயக்குனர் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது, நடிகர்கள் சத்யராஜ், ராஜீவ் மேனன், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதுதான். இதுவரை நான் நடித்தப் படங்களில் இருந்து இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் செய்யாத வித்தியாசமான ஒன்று. என்னுடையது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த எல்லோருடைய கதாபாத்திரங்களுமே வலுவானதாக இருக்கும். நிறைய சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். வில்லன்கள் என்னை கட்டிவைத்து டார்ச்சர் செய்யும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தாலும் இப்போது அதை திரையில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வலிகளுக்கு பின்னால்தான் இனிமை என்பதை என்னால் உணர முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.