என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அவருடைய நடிப்பு, நடனம் என அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவர் பாடும் பாடலுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது விஜய் பாடி ரசிகர்களை குஷி படுத்துவார். கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா நடித்து வெளிவந்த 'பெரியண்ணா' என்கிற படத்தில் விஜய் மூன்று பாடல்களைக் பாடியிருந்தார். அதன்பின் இப்போது தான் ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதிலும் தனது படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடியிருப்பது இன்னும் ஒரு தனிச்சிறப்பு.