சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
கமல்ஹாசன்,
ஷங்கர் இணைந்திருக்கும் இந்தியன்- 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து
இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை இரண்டாவது வாரத்தில்
இப்படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் -2
படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது இந்தியன் -3 படத்தின் காட்சிகளையும்
படமாக்கி வந்தார்கள். அதன் காரணமாகவே தற்போது இந்தியன்-2, இந்தியன்-3 ஆகிய
இரண்டு படங்களின் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,
இந்தியன் -2 படம் தியேட்டர்களுக்கு வரும்போது அப்படம் முடிவடைந்ததும்,
இறுதியில் இந்தியன்-3 படத்தின் டிரைலரை வெளியிடுவதற்கு படக்குழு
திட்டமிட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு படத்தின் அடுத்த பாகத்திற்கான டிரைலரும்
முந்தைய பாகத்தோடு வெளியானது இல்லை. ஆதலால் கோலிவுட்டில் இது ஒரு புதிய
முயற்சியாக பார்க்கப்படுகிறது.