பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சிவகார்த்திகேயன் நடித்த டான் என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். 100 கோடி வசூல் சாதனை செய்த இப்படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் சிபி சக்ரவர்த்தி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில், அது உறுதியாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் அவர் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொல்லி ஓகே செய்தவர், அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் பல மாதங்களாக ஈடுபட்டிருந்தார். தற்போது அந்த பணிகளை முடித்துவிட்டு நடிகர் - நடிகையர், டெக்னீஷியன்களை ஒப்பந்தம் செய்யும் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார். மேலும், தற்போது அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இந்த இரண்டு படங்களையும் முடித்ததும் சிபி சக்ரவர்த்தியுடன் இணைகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.