நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
மெட்ரோ ரயில் பணி அதிகாரியை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்து பின்னணி கொண்ட பாடல்களை பாடி பிரபலமானவர் வேல்முருகன். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த வழியாக வேல்முருகன் காரில் வந்துள்ளார். ஒருவழி பாதையில் அவர் தடுப்புகளை நகற்றி காரை எடுத்து செல்ல முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு தடுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாகவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் தெரிகிறது. வேல்முருகன் தாக்கியதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீஸில் வேல்முருகன் மீது வடிவேலு புகார் அளித்தார். அதன்பேரில் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.