அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ்நாட்டில் கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கான மவுசு இன்றும் அப்படியே இருக்கிறது. அப்படி தனது கிராமத்து குரலால் வெள்ளித்திரையில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் வேல்முருகன். வேல்முருகனின் குரல் மட்டுமே தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமாகியிருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு திரைபிரபலமாகவும் அறியப்பட்டார். இதன் மூலம் தற்போது அவருக்கு நடிப்பதற்கான கதவுகள் திறந்துள்ளன.
பிரஜின் நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, மிர்ச்சி சிவா நடிப்பில் சலூன், படைப்பாளன், அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா, யோகி பாபுவுடன் பெயரிடப்படாத படம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் வேல்முருகன் தற்போது நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கவுண்டமனி நடிப்பில் வெளியான 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். அதோடு பாடல்களிலும் பாடகராக தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் பாடகராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும் வேல்முருகன் திரையில் மின்னுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.