லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படத்தில் பரத், வாணி போஜன் , கே.எஸ்.ரவிகுமார், ராஜ்குமார், காவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்குகிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
படம் பற்றி தயாரிப்பாளர் டில்லி பாபு கூறியதாவது: திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்ச்சிகரமானதாக இருந்தது. பரத் , வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் அவரவர் கதாப்பாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள். இயக்குநர் சக்திவேல் இயக்கும் முதல் படம் போல இல்லை, மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரை போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத்திலும் மிகச்சரியாக செயல்பட்டு, இப்படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப்பானது என்றார்.